Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 02 APR 1970
இறப்பு 02 MAY 2026
அமரர் ஹரிகரன் மகாதேவன்
வயது 56
அமரர் ஹரிகரன் மகாதேவன் 1970 - 2026 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Derbyshire Ilkeston என்னும் இடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஹரிகரன் மகாதேவன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

எங்கள் அன்புத் தந்தையே!
மாதம் ஒன்று மறைந்தாலும்
ஆறிடுமா எங்கள் துயரமய்யா?  

 கண் முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எங்கள் முன்னே உங்கள் முகம்
என்றும் உயிர் வாழும் எங்கள்
இதயமதில் இறுதி வரை நிலைத்து நிற்கும்  

வானத்தை விட்டு நிலவையும்
வாசத்தை விட்டு மலரையும்
பிரிக்க முடியாது- அதுபோல
உங்கள் நினைவுகளை- எங்கள்
நெஞ்சை விட்டும் விலக்கமுடியாது

நெஞ்சில் உங்கள் நினைவுகளை சுமந்தே
நெடுங்காலம் நாம் இங்கே
நிலைத்து வாழ்வோமே
வானில் விண்மீனாய் இருந்து
எம் வாழ்வை வளப்படுத்துவீரே!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

திரு ஹரிகரன் மகாதேவன் அவர்களின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்றிருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசி, முகநூல். மின்னஞ்சல். Ripbook ஆகியவை மூலமாக எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும். மலர்வளையங்கள். மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார். உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தினர் சார்பாக நன்றிகளை தெரிவிப்பதோடு. 07-06-2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று ந.ப 12:00 மணியளவில் நடைபெறவிருக்கும் மலரஞ்சலி மற்றும் மதிய போசனத்திலும் கலந்துகொள்ளுமாறு உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

Hall Address:
MARLPOOL UNITED REFORMED CHURCH COMMUNITY ASSOCIATION
Chapel Street, Marpool, Heanor, Derbyshire, DE75 7NA

இங்ஙனம், குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

யூலியன் - மைத்துனர்
ராம் - சகலன்
Tribute 9 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்