Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அமரர்கள் சண்முகம் தம்பு, மகேஸ்வரி சண்முகம்
விண்ணில் - 22 JAN 2025
அமரர்கள் சண்முகம் தம்பு, மகேஸ்வரி சண்முகம் 2025 அனலைதீவு 7ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். அனலைதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி 85 கட்ஷன் வீதியை வசிப்பிடமாகவும், பிரான்ஸை தற்போதைய வாழ்விடமாகவும் கொண்ட மகேஸ்வரி சண்முகம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

மறவா நினைவுகளை மனதோடு தந்துவிட்டு,
இறையோடு சென்று 31 நாட்கள் ஆனதே அம்மா!
வார்த்தைகளால் சொல்ல முடியாத
வலிகள் உங்கள் இழப்பு!

எதிர் பார்க்கவில்லை உங்கள் பிரிவை
வாழ்கின்றோம் உங்கள் அரவணைப்பில்
தவிக்கின்றோம் உங்கள் பிரிவால்
வாழ்கின்றோம் உங்கள் நிழலாய்!

மழைகூட ஒரு நாளில் தேனாகலாம்,
மணல் கூட ஒருநாளில் பொன்னாகலாம்
ஆனாலும் அவையாவும் நீங்கள் ஆகுமா?
அம்மா என்று அழைக்கின்ற சேய் ஆகுமா?

உள்ளமிது குமுறுகிறது
உங்கள் மடி தேடி ஏங்குதே
அன்னையே… அன்பு அம்மாவே
என் ஆருயிரே…
அருவியாய் அழுது தீர்த்தாலும்
ஆறாது தாயே உங்கள் பிரிவு..

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 11 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.