திதி:10/02/2026
அமரர் சண்முகம் தம்பு
தோற்றம் : 28 Oct, 1933 மறைவு : 22 Jan, 2025
யாழ். அனலைதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி 85 கட்ஷன் வீதியை வசிப்பிடமாகவும், France ஐ வாழ்விடமாகவும் கொண்டிருந்த அமரர் சண்முகம் தம்பு அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அமரர் மகேஸ்வரி சண்முகம்
தோற்றம் : 29 Nov, 1944 மறைவு : 28 Nov, 2024
யாழ். அனலைதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி 85 கட்ஷன் வீதியை வசிப்பிடமாகவும், France ஐ வாழ்விடமாகவும் கொண்டிருந்த அமரர் மகேஸ்வரி சண்முகம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் உறைவிடமாகவும்
பாசத்தின் சிகரமாகவும்
வாழ்ந்த எங்கள் அன்புத் தெய்வங்ளே
மனதோடு எமைச் சுமந்து பிரிவோடு துயர் தந்து ஆண்டு
ஓன்று ஆனாலும் ஆறாது உங்களது
இழப்பின் துயர் எங்கள் நெஞ்சை விட்டு
நீங்காது உங்களின் நினைவுகள்
கலைந்து செல்லும் மேகம் போல்
காலங்கள் கடந்து சென்றாலும் ஐயா அம்மா
உங்களின் நினைவுகள் புயலாக, எரிமலையாக
கடலலையாக எம் மனங்களில் பொங்கிப்
பிரகாசித்துக் கொண்டே இருக்கும்
ஓயவில்லை உங்களின் நினைவுகள்
அகலவில்லை உங்களின் அன்பு முகங்கள்
அன்புடனும், பாசத்துடனும் அரவணைத்து
முத்தம் சொரிந்த பேரக்குழந்தைகள், பூட்டக்குழந்தைகள்
தாத்தா, பாட்டி என அழைக்கும் குரல்
உங்களுக்குக் கேட்கின்றதா?
உங்களின் வழித்தடத்தைப் பின்பற்றி
நன் மக்களாய் நாம் மிளிர்வோம்
அடுத்து ஒரு பிறப்பு
உண்டென்றால் அப்பொழுது மட்டுமல்ல
ஏழேழு பிறப்பிலும் எங்களுகே தாய், தந்தையராய்
பிறந்திட வேண்டுகின்றோம்
வரலாறு படைத்து
மறைந்தும் மறையாது எங்கள் எல்லோரது
மனதிலும் நீக்கமற வாழும் எங்கள் அன்புத்
தெய்வங்களே! நெஞ்சடைக்கும் நினைவுகளுடன்
எங்கள் கண்ணீர்ப் பூக்களைக்
காணிக்கை ஆக்குகின்றோம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்.ஓம் சாந்தி சாந்தி ?