Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 16 NOV 1967
இறப்பு 28 JUL 2019
அமரர் லோஷனா விஜயகுமார் 1967 - 2019 பருத்தியடைப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 26 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். ஊர்காவற்றுறை பருத்தியடைப்பைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், பிரித்தானியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த லோஷனா விஜயகுமார் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

முதலாம் ஆண்டு நினைவலை!

அம்மாவிற்கு நிகர் அன்னை !
அன்னைக்கு நிகர் தாய் !
தாய்க்கு நிகர் அம்மா !
உலக ஒட்டுமொத்த ஆராய்ச்சி
மையம் இன்று வரை தோற்றுக் கொண்டே
இருக்கிறது உன்
அன்பிற்கு ஈடாய்
என்ன இருக்குமென்று ....

மீண்டும் உன்
கருவறைக்குள்
எனக்கோர்
இடம் கிடைக்குமா?....

மழைகூட ஒருநாளில் தேனாகலாம்,
மணல்கூட ஒருநாளில் பொன்னாகலாம்
ஆனாலும் அவை யாவும் நீ ஆகுமா?
அம்மா என்று அழைக்கின்ற சேய் ஆகுமா?

உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
இறைவனின் பாதத்தில் கண்ணீர் மலர்களை வைக்கின்றேன்.

தகவல்: கணவர்