போய்வா நண்பனே போய்வா எங்களை மட்டும் விட்டுவிட்டு போகத்துனிந்தவானே போய்வா நீ போய்வா நீ வரப்போவதில்லை என்றுணர்ந்தாலும் அற்ப ஆசையில் சொல்கிறேன் போய்வா நண்பனே நீ போய்வா கண்களில் வழியும் கண்ணீரோடு இறுதியாய் உன்னை காண முடியாமல் போய்விட்டதுடா லோபி ,போய்வா நீ போய்வா நண்பனே கனத்துப்போன இதயம் என் நண்பனே லோபி நீ போய்வா எங்களது சுமைகளை இறக்கிவிட்டு நீயே சுமையாகிப் போனாய் உன்னை சுமக்க முடியாமல் சுருங்கிக் கிடக்கிறோம் லோபி போய்வா நீ போய்வா உன் இறுதிப் பயணத்தில் இல்லாமல் போனோமே , உலகத்தில் இப்படிதான் வாழவேண்டும் சொல்லித்தந்தவானே நீ சொல்லாமல் கொள்ளாமல் போனதேன் லோபி போய்வா நீ போய்வா துயரத்தை பகிர்ந்தவானே துக்கத்தை துடைத்தவனே நீயே துயரமாகி துக்கம் தந்து போனாயே நண்பனே போய்வா நீ போய்வா நாளை எங்களுக்கும் நாள்வரும் நீ காத்திரு இப்பொழுது நீ போய்வா லோபி நீ போய்வா. ????????. ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி.
Very sorry to hear the news today of the passing of Loga. My thoughts are with his family at this very sad time. Sarah Hylton