மரண அறிவித்தல்
பிறப்பு 20 OCT 1967
இறப்பு 02 MAY 2020
திரு லோகசிங்கம் பிரதாபன்
Student- Vavuniya Rambaikulum Girls Maha Vidiyalayam(Primary), Jaffna Hindu College(1986 A-Level Batch, Westminster University(1987-1990) Master of Science Degree in Telecom Management at Anglia University, Telecom Engineer, Owner of Bridge Park Hotel(Stonebridge- London), Founding Member of London Jolly Stars Sports Club, Governor of British Tamils Sports Council Governor & Former Chairman of British Tamils Cricket League
வயது 52
திரு லோகசிங்கம் பிரதாபன் 1967 - 2020 வவுனியா, Sri Lanka Sri Lanka
Tribute 166 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

வவுனியா யாழ் வீதியைப் பிறப்பிடமாகவும், London Kingsbury ஐ நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட லோகசிங்கம் பிரதாபன் அவர்கள் 02-05-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு அன்னமுத்து தம்பதிகள், நமசிவாயம் செல்லமுத்து தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற கார்த்திகேசு லோகசிங்கம்(முன்னாள் அதிபர்- வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம், ஓமந்தை மத்திய கல்லூரி) மங்கையர்க்கரசி லோகசிங்கம்(இளைப்பாறிய ஆசிரியை- வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம், வவுனியா இறம்பைக்குளம் மகளிர்க் கல்லூரி, ஓமந்தை மத்திய கல்லூரி, London John Kelly Girls High School, Kingsbury High School) தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்(முன்னாள் வவுனியா நகரசபைத் தலைவர்) சேதுரஞ்சிதம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுபஶ்ரீ(சுபா- பிரித்தானியா) அவர்களின் அன்புக் கணவரும்,

காவியன் அவர்களின் அருமைத் தந்தையும்,

மாதினி ஶ்ரீசங்கரன்(பிரித்தானியா) அவர்களின் அன்புச் சகோதரரும்,

விவேகானந்தன் ஶ்ரீசங்கரன்(பிரித்தானியா), பாபு(ஜேர்மனி), காலஞ்சென்ற சுமதி, சுகந்தி(வவுனியா), கண்ணன்(பிரித்தானியா), கிரி(வவுனியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

றொசாரியா(ஜேர்மனி), கிருஷ்ணன்(வவுனியா), குமாரி(பிரித்தானியா), துகிர்தா(வவுனியா) ஆகியோரின் அன்புச் சகலனும்,

சேரன்(பிரித்தானியா), ஆரதி(பிரித்தானியா), சரீனா(ஜேர்மனி), செல்வானா(ஜேர்மனி), நிஷான்(பிரித்தானியா), துஷான்(பிரித்தானியா), தாரகா(பிரித்தானியா), ஆதினி(வவுனியா), ஆதனா(வவுனியா) ஆகியோரின் அன்பு மாமாவும்,

சண்முகப்பிரியன்(வவுனியா) அவர்களின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டில் தற்சமயம் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக இறுதி நிகழ்வுகள் மிகவும் குறைந்த அளவு எண்ணிக்கையான குடும்ப உறவுகளுடன் இடம்பெற இருப்பதால் தயவு செய்து உங்கள் வருகையைத் தவிர்த்துக் கொண்டு உங்கள் அனுதாபங்களைத் தொலைபேசி வழியாகவோ அல்லது சமூக வலையத்தளங்கள் ஊடாகவோ பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

மலர் வளையம் அனுப்ப விரும்புபவர்கள்  Anjel Funeral Directors, 267 Allenby Road, Southall Middlesex UB1 2HD, United Kingdom எனும் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். 

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos