1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 20 OCT 1967
இறப்பு 02 MAY 2020
திரு லோகசிங்கம் பிரதாபன்
Student- Vavuniya Rambaikulum Girls Maha Vidiyalayam(Primary), Jaffna Hindu College(1986 A-Level Batch, Westminster University(1987-1990) Master of Science Degree in Telecom Management at Anglia University, Telecom Engineer, Owner of Bridge Park Hotel(Stonebridge- London), Founding Member of London Jolly Stars Sports Club, Governor of British Tamils Sports Council Governor & Former Chairman of British Tamils Cricket League
வயது 52
திரு லோகசிங்கம் பிரதாபன் 1967 - 2020 வவுனியா, Sri Lanka Sri Lanka
Tribute 166 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

வவுனியா யாழ் வீதியைப் பிறப்பிடமாகவும், London Kingsbury ஐ நிரந்தர வதிவிடமாகவும் கொண்டிருந்த லோகசிங்கம் பிரதாபன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஜ்சலி.

புன்னகை பூத்த முகமும்
உறவுகளை நேசிக்கும் குணமும்
நட்புப் பாராட்டும் தன்மையும்
எங்கள் உயர்வையே இலட்சியமாகக் கொண்ட
தங்கள் முகம் பார்க்காது உள்ளம் வாடுகிறதே!

விழிகள் எப்பொழுதும் தேடுகின்றனவே
என்று காண்போம் என்று மனம் ஏங்குகிறது!
பாசத்தின் இருப்பிடமாய் பொறுமையின் பொக்கிசமாய்
சுமைதாங்கியாய் எல்லோர்க்கும் நல்லவராய் நடந்தீர்!
பண்புடைமை காத்து பக்குவமாய் வழி நடந்தீர்
ஓராண்டு சென்றாலும் ஈரவிழி காயவில்லை!

ஏனோ இறைவன் இடைநடுவில் பறித்துவிட்டான்
அதனால் ஏங்குகின்றோம் தினமும்
குடும்ப விருட்சத்திற்கு நீராகி வேராகி நின்று நிழல்பரப்பி
துன்புற்றோர் துயர் துடைத்து துணைக்கரமாய்
அடைக்கலம் தந்து வாழ்வாங்கு வாழவைத்த தெய்வமே! 

எண்ணிய பொழுதெல்லாம் கண்ணில் நீர் கசிகிறதே
குடும்ப ஒளி விளக்கே! எங்கே சென்றாய்?
உணர்வால் உள்ளத்தால் எம்மோடு வாழும் தெய்வமாகி
ஒளியாகி எமக்கெல்லாம் வழியாகி எம் இதயங்களில் வாழ்கின்றீர்!

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

இன்றும் உன் நிழலாடும் நினைவுகளில் வாழும்
மனைவி, மகன்...

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos