Loga என்று நான் பாசத்துடன் அழைக்கும் என் உடன் பிறவாத் தம்பியே எங்கள் எல்லோரையும் மறந்து சிறு வயதிலேயே விண்ணுலகம் போவதற்கு எப்படியெடா வந்தது மனம் உனக்கு? விதியை எண்ணி வருந்துவதா இல்லை ஆண்டவனுக்குத்தான் கருணையில்லையோ என்று ஆதங்கப்படுவதா? கலகலப்பாகவும் பண்பாகவும் எல்லோருடனும் பழகுவாயே, ஒருமுறை சந்தித்துவிட்டாலே எல்லோரும் உனக்கு நண்பர்களாகி விடுவார்களே. இன்று எல்லோரையும் கண்ணீரில் மூழ்கவிட்டு எங்கே சென்றுவிட்டாய்? உன்னை இழந்து தவிக்கும் உன் மகன் காவியன், அன்பு மனைவி சுபா, அம்மா, மாதினி, சங்கருக்கு எப்படித்தான் எம்மால் ஆறுதல் கூறமுடியும்? உனக்கு நிகர் நீயேதான் உன் இழப்பை யாராலுமே ஈடுசெய்ய முடியாது. எங்களுடன் நீ இல்லையென்றாலும் உன் நினைவுகள் என்றென்றும் எங்கள் இதயங்களில் ஒலித்துக்கொண்டே இருக்கும். உன் பிரிவால் வாடும் தம்பா அண்ணா, ஜெயந்தி அக்கா, விதுன் & விஷான்
Very sorry to hear the news today of the passing of Loga. My thoughts are with his family at this very sad time. Sarah Hylton