யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், பாவற்குளம், ஜேர்மனி, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த குருநாதர் பசுபதிப்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:02/01/2024
நினைத்திருப்போம்
பிள்ளைகளாய் நாமிருந்தும்
நண்பர்களாய் எமையணைத்த
தந்தையே - முற்பிறப்பில்
நாம் செய்த பெருந்தவமே...!!!
ஓராண்டு நூறாண்டாய்
நகர மறுக்குதய்யா
வாட்டி வதைக்குதய்யா
பார்க்கும் இடங்களெல்லாம்
உன் முகமன்றி வேறேதும்
காட்சியாய் பதியுதில்லையே..!!!
பக்கம் நீ இருந்த மட்டும்
துக்கம் நாம் அறிந்ததில்லை
நித்தம் உன் புன்சிரிப்பே
எம் வாழ்வை நிறைத்ததய்யா...!!!
பொட்டிழந்த உன்னவளும்
கூடிழந்த உன் குஞ்சுகளும்
விளையாட்டுத் தோழனைத் தேடும்
உன் பேரச்செல்வங்களும்
பேதலித்தனர், மீளவில்லையய்யா...!!!
ஓர்குடலில் உயிர் துளிர்த்த
உன் அன்பு உடன்பிறப்புகள்
பாசப்பகிர்வே பசுபதியேயென
பதைத்த கணம் மாறவில்லை...!!!
மீண்டும் ஒரு பிறப்பெடுங்கள் - எம்
வீட்டை வந்து நிறைத்திடுங்கள்
காத்து நிற்கின்றோம் - எம்
காவல் தெய்வமே ஓடிவாய்யா...!!!