யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், சிங்கப்பூர் Yishun, கனடா Stouffville ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த குமுதினி சரவணபவன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 10-06-2026
மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன…
ஆனால், காலம் மட்டும் நகர்ந்ததே தவிர,
உன் நினைவுகள் எங்கும் நகரவில்லை.
“பாசம் உலாவிய கண்களும் எங்கே?
பாய்ந்து துலாவிய கைகளும் எங்கே?”
புற்றுநோயுடன் நீ போராடிய விதம்
இன்னும் எங்கள் கண்முன் நிற்கிறது.
வலியை உள்ளத்தில் மறைத்து,
முகத்தில் புன்னகையை அணிந்து,
குடும்பத்திற்காக தைரியமாக நின்ற அந்த நாட்கள்
எப்போதும் மறக்க முடியாதவை.
நீ இவ்வுலகை விட்டு நீங்கிய நாள்
எங்கள் குடும்ப வாழ்க்கையில் ஒரு வெற்றிடத்தை மட்டும் அல்ல,
வார்த்தைகளால் விவரிக்க முடியாத
ஒரு ஆறாத வலியையும் விட்டுச் சென்றது.
ஆனால் இன்று கூட, உன் அன்பு
எங்கள் வீட்டின் சுவர்களில் ஒலிக்கிறது…
உன் சிரிப்பு எங்கள் நினைவுகளில் வாழ்கிறது…
உன் அக்கறை எங்கள் தினசரி வாழ்வின்
ஓர் அங்கமாகவே இருக்கிறது…
உடலால் நீ எம்முடன் இல்லாவிட்டாலும்,
உன் ஆன்மா எங்கள் பிரார்த்தனைகளிலும்,
நினைவுகளிலும், ஒவ்வொரு மூச்சிலும் வாழ்கிறது.
இறைவன் உன் ஆத்மாவிற்கு
நித்திய அமைதியை அருள்வானாக.
நீ விட்டுச் சென்ற அன்பும் நினைவுகளும்
எங்கள் இதயங்களில் என்றென்றும்
அழியாமல் நிலைத்திருக்கும்.
“சிலர் வாழ்ந்த காலத்தால் அல்ல,
அவர்கள் விட்டுச் சென்ற அன்பால், பற்றால், பாசத்தால்
என்றும் நினைவில் வாழ்கிறார்கள்…”
அன்புடன் நினைவுகூர்கிறோம். 🌹
நினைவுகள் நீக்கமற வாழ்க்கை சக்கரம் தன்பாட்டில் சுழன்று கொண்டிருக்கும்;27வருட உங்களின் இணைவாழ்வு, நூறாண்டு தாண்டிய பசுமரத்து ஆணியாய் இன்பமும் வருத்தும் கனவுகளாய் … Take care yourselves which was...