Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 01 JUL 1971
இறப்பு 13 JUN 2023
அமரர் குமுதினி சரவணபவன்
வயது 51
அமரர் குமுதினி சரவணபவன் 1971 - 2023 மயிலிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 41 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திதி:02-06-2024

யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், சிங்கப்பூர் Yishun, கனடா Stouffville ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த குமுதினி சரவணபவன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

உயிரிலும் உணர்விலும் ஒன்றாய் கலந்திருந்தாய்
கண்மூடி மறைவாய் என்று கனவிலும் நினைக்கவில்லை
காலங்கள் மாறினாலும் கனவுகள் சென்றாலும்
உன் கோலமுகமும் குளிர்ந்த குறுநகையும் மாறாது!
உன் அன்பான பேச்சும், கனிவான உள்ளமும்
உன் போல் துணையும் யாருமில்லை இன்று வரை

ஆசை நீ...நேசம் நீ...அன்பு நீ... உயிர் நீ...
எங்கும் நீ..எதிலும் நீ..என்று இருந்தவளே!
எம் வாழ்வின் அனைத்துமாய் இருந்தவளே!

 நீ பிரிந்து சென்றாலும் பிரியாது இருக்கிறது
உன்னோடு நான் கொண்ட உணர்வுகள்!
உன் உயிரோடு நான் கொண்ட உறவுகள்!
உன்னோடு நான் பேசிய வார்த்தைகள்!
உன் வாழ்வோடு நான் கொண்ட பிணைப்புகள்!

தாங்க முடியாத துயரங்களின் வலியையும்,
சொல்ல முடியாத உணர்வுகளின் வலியையும்,
நீ இல்லாத நாள் முதல், என் தலையணைகள் மட்டுமே
அறிந்து கொண்டிருக்கிறது
ஆண்டு ஒன்று கடந்தாலும், உறவு பல இருந்தாலும்,
உன் நினைவினால் வாழ்கின்றோம்...

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கும்
கணவர், பிள்ளைகள்  

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

Notices

மரண அறிவித்தல் Thu, 15 Jun, 2023
நன்றி நவிலல் Thu, 13 Jul, 2023