
யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், சிங்கப்பூர் Yishun, கனடா Stouffville ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த குமுதினி சரவணபவன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 22-05-202
என்னவளே!
என்னையும் பிள்ளைகளையும் தவிக்கவிட்டு
ஆண்டு இரண்டுகள் ஆனதம்மா!
காதல் என்றால் சேய் ஆவேன்
கருணை என்றால் தாய் ஆவேன்
கண்ணா உந்தன் நிழலாவேன்
உனக்கென நான் வாழ்வேன்
என வாழ்ந்தவளே!
ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல!
உள்ள உணச்சியை
வார்த்தையில் வடித்துச் சொல்ல!
நின்றால் நடந்தால் உன் நினைவு
உன் நினைவே அகன்றால் உன்கனவு
நீயர்ற நானாக ஆண்டு இரண்டுகள் ஆனதம்மா!
உன் குழந்தைகளின் உணர்வலைகள்
பொன்னும் பொருளும் கொட்டிக் கொடுத்தாலும்
பெற்றவள் அன்பு போல் வருமா?
நம்மைப் பெற்றவளின் தாய்மடியைத் தருமா??
கருப்பைக்குள்ளிருந்து நாம் காலுதைத்த போது...!
விருப்புற்று எம்பாதம் முத்தமிட்ட தாயே!
உடலில் சுமந்து உயிரை பகிர்ந்து
உருவம் கொடுத்த உயிரே!
இரவெல்லாம் விளக்காக விழித்திருந்து
எமக்காய் உன் உறக்கம்
துறந்து மகிழ்ந்திருந்தாய் அம்மா…!
நீ இல்லாமல் அரண்மனையாய் இருந்தாலும்
அநாதையாய் தவிக்கின்றோம்…!
ஆயிரம் கடவுளின் வரமிருந்தாலும் தாயே
உந்தன் ஆசிர்வாதத்திற்கு ஈடாகுமா?
இம்மைக்கும் ஏழேழு பிறவிக்கும்
அன்போடு எமை ஆழ்வாய்!
என்றென்றும் எழிலோடு- எம்
நெஞ்சிலெ நீ வாழ்வாய்!
உங்கள் ஆத்மா சாந்திக்காகப்
பிரார்த்திக்கின்றோம்!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
பேரிழப்புக்கு இரங்கல்! துயரிலிருந்து மீண்டுவரக் காலம் வழி செய்யட்டும்