

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த குமரேசு சந்திரகோபால் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 29-04-2025
ஆண்டுகள் இரண்டாகலாம் - அப்பா
உங்கள் அன்புருவம் என்றும் நிலையானது - அப்பா
காலங்கள் கரைந்தோடலாம் - அப்பா
உங்கள் நினைவுகள் எம்மில் நிலையானது - அப்பா
எங்கள் வாழ்வுக்கு வழிகாட்டி நீங்கள் தான் - அப்பா
அந்த பாசத்துக்கு ஈடுண்டோ - அப்பா
அன்பை கூட அளவாய் பகிர்வீர்கள் - அப்பா
ஆனாலும் எங்கள் அளவு கடந்த நேசக்காரன் - அப்பா
வெறும் வார்த்தைகளால் வாழத்தெரியாத எங்கள் - அப்பா
உங்கள் வாழ்க்கை தான் பெரும் விசித்திரம் - அப்பா
நீண்ட நாள் வாழ ஆயுள் தராத இறைவனும் - அப்பா
இன்று உங்கள் உருவமாய் தோன்றுகிறான் - அப்பா
இறைவனாய் இன்று எம்மை காக்கும் - அப்பா
என்றும் உங்கள் ஆசிகளால் நாம் ஆசீர்வதிக்கப்படுகிறோம் - அப்பா
என்னாளும் உங்களுடைய ஆத்மா சாந்தியடைய
பிராத்திக்கும் உங்கள் அன்புக்குரிய
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.