

-
29 MAR 1950 - 22 APR 2023 (73 வயது)
-
பிறந்த இடம் : புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : பரிஸ், France
யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த குமரேசு சந்திரகோபால் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அப்பா! ஆண்டொன்று ஆனதப்பா இன்று!
உனை இழந்து! உமைப் பிரிந்தோம்!
பல நாள் ஊணுறக்கம் மறந்தோம்!
அழுதழுது தேடுதப்பா
எம் விழிகள் உங்களைக் காண்பதற்கு
ஒருமுறை வருவீர்களோ!
நினைத்து பார்க்கு முன்னே
நினைக்காமல் போனதென்ன
நிஜம்தானா என்று நினைக்கின்றோம் தினமும்
திக்கற்று தவிக்கின்றோம் திரும்பி வரமாட்டிரே
எங்கள் இதயதுடிப்பில் அன்பு கொண்ட உம் முகம்
அருகினில் இருப்பது போல் உணர்கின்றோம்
தந்தையாய் உதித்த எங்கள் பாசவிளக்கு ....
அள்ளி எடுத்து அரவணைத்த அன்புத் தந்தை
பார்விட்டு அகன்று ஓராண்டு ஓடியது
கார்மேக கூட்டமாய் கலையாது
உங்கள் நினைவுகள் காலம் கடந்தும் வாழும்
உங்கள் ஞாபகங்களுடன்....
அன்பு குடும்பத்தினர்..!
குமரேசு சந்திரகோபால் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினம் எதிர் வரும் 22-05-2024 ஆகும். இத்தினத்தில் அன்னாரை நினைவு கூறுவதோடு சமய முறைக்கமைய அன்னாரது ஆண்டு திவசம் எதிர் வரும் 09-05-2024 அன்று அவரது இல்லத்தில் (07, Allée georges braque 93300 Aubervilliers, France) இடம்பெற்று நினைவு வணக்க நிகழ்வும் மதியபோசன விருந்துபசாரமும் அருகில் உள்ள (90,Rue Emile zola, 93120 La courneuve ,France) சித்தி விநாயகர் ஆலயத்தில் 09-05-2024 அன்று பி.ப 12:00 மணியில் இருந்து நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.
இவ்வறிவில்தலை ஏற்று உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் தவறாது நினைவு தினத்தில் பங்கு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka பிறந்த இடம்
-
பரிஸ், France வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
Request Contact ( )
