Clicky

நன்றி நவிலல்
தோற்றம் 24 FEB 1942
மறைவு 20 MAY 2021
அமரர் குமாரவேலு நவறட்ணம்
Retired Interpreter - High Court, Vavuniya
வயது 79
அமரர் குமாரவேலு நவறட்ணம் 1942 - 2021 தம்பசிட்டி, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், வவுனியா பண்டாரிகுளத்தை வதிவிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட குமாரவேலு நவரட்ணம் அவர்களின் நன்றி நவிலல்.

என் அன்பு மாமாவுக்கு...
எண்ணிலடங்கா முறை என் மனம்
உங்களை ஒரு முறை பார்த்துவர வேண்டுமென்று பரிதவித்ததை உணராமல் எங்களை எல்லாம்
கண்ணீரில் கரை ஒதுக்கி எங்கு சென்றீர்கள் மாமா

உங்களுக்கே பொருத்தமான உங்கள் பெயர்..
கம்பீரமான பேச்சு...
கனதியான மதிப்பு மிக்க வார்த்தைகள்...
நேர்த்தியான செயல்...
நெஞ்சம் நிறைந்த பாசம்...
சிறிதாயினும் உறவுகளுக்கு உதவிடும் மனம்...
தேவையற்ற பேச்சுக்கள் இல்லாத குனம்...
தெய்வபக்தி நிறைந்த கண்கள்...
எப்போதும் உழைத்துக்கொண்டிருந்த உங்கள் கால்கள்...
எத்தனை பாஷைகள் உங்கள் நாவில் அத்தனை அறிவுக்கு சொந்தக்காரர்...

இப்படி நவரத்தினமாய் உங்கள் ஒழுக்கம் நிறைந்த வாழ்க்கை கண்டு நான் வியந்த
தருணங்கள் அதிகம் மாமா..

பாதி வாழ்க்கையில் மாமியை பறிகொடுத்தும்
மீதி வாழ்க்கையை மகன்களுக்காய் மட்டும் வாழ்ந்து முடித்தீர்கள்...

அளவுச் சாப்பாடு...
அளவு தூக்கம்...
அளவுப்பயணம்...
எத்தனை வசதிகளிருந்தும் ஏன் மாமா ஏழ்மையான வாழ்வையே தேர்ந்தெடுத்தீர்கள்...

நீங்கள் வைத்த மரங்களில் இளைப்பாறியது குருவிகளும் குயில்களும் மட்டுமல்ல மாமா
உங்கள் நிழலில் வாழ்ந்த நாங்களும் தான்...

நீங்கள் தலைமகனாய் பிறந்ததால் மட்டுமே உங்கள் குடும்பம் தலைநிமிர்ந்து
நின்றது...
உங்கள் சகோதரம் மட்டுமின்றி உறவுகளையும் சேர்த்தே வளர்த்தீர்கள் உங்கள்
வீட்டில்...

என் மாமாவின் வாயிலிருந்து வரும் "நீ கெட்டிக்காரி" என்ற ஒற்றை வார்த்தை என்னை
எப்போதும் உயரச்செல்லவே தூண்டியது...

அதிகாலையில் உங்கள் தேவாரத்திற்காய் காத்துக்கிடந்த கடவுள்கள் கூட கண்மூடி
கிடந்து என் மாமாவை கைவிட்டதேனோ...

நானறிந்து என் உறவில் யாருமில்லை மாமா
அறிவிலும் அழகிலும் உங்களை மிஞ்ச...

என்னை உங்கள் மகளைப் போல் பார்த்துக்கொண்டீர்கள் இன்று இறுதி யாத்திரை
செல்லும் உங்கள் பாதம் தொட்டு வணங்க முடியாத பாவி நான் மாமா...

மருமகள்
பவானி

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 18 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்