மரண அறிவித்தல்
மண்ணில் 23 JUL 1933
விண்ணில் 22 NOV 2021
திரு குமாரசாமி சிவசுப்பிரமணியம்
ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தர்- நீர்ப்பாசனத் திணைக்களம்
வயது 88
திரு குமாரசாமி சிவசுப்பிரமணியம் 1933 - 2021 மலேசியா, Malaysia Malaysia
Tribute 4 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். மாவிட்டப்புரம், சண்டிலிப்பாய் மாசியப்பிட்டி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட குமாரசாமி சிவசுப்பிரமணியம் அவர்கள் 22-11-2021 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காங்கேசந்துறை-மாவிட்டபுரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற குமாரசாமி, பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற Dr.பொ.மயில்வாகனம்(மலாயன் பென்சனியர்), தங்கம்மா தம்பதிகளின் மருமகனும்,

காலஞ்சென்ற மனோண்மணி அவர்களின் அன்புக் கணவரும்,

விஜயகுமார்(லண்டன்), பாமினி(நோர்வே), இரவிக்குமார்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெயக்குமாரி, ஜெயக்குமார், கயல்விழி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அபிதன், ஹரிணி, வர்ஷா, ராகுல், சமந்தா ஆகியோரின் அருமைப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான வி.பொன்னம்மா, மு.இராசமணி, கு.சிவகுருநாதபிள்ளை, பா.அன்னலட்சுமி மற்றும் கு.கிருஸ்ணமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மகேஸ்வரி(கனடா), காலஞ்சென்ற மனோறஞ்சிதம், மற்றும் தருமராசா(கனடா), Dr.கனகராஜா(கனடா), Dr.ஞானபவன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-11-2021 திங்கட்கிழமை அன்று பி.ப 02.30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து அளவெட்டி கொட்டுப்பனை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

விஜயகுமார் - மகன்
ஜெயக்குமாரி - மருமகள்
ரவிக்குமார் - மகன்
பாமினி - மகள்