5ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் குமாரசூரியர் தெய்வானைப்பிள்ளை
1948 -
2020
திருகோணமலை, Sri Lanka
Sri Lanka
Tribute
9
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திருகோணமலை உவர்மலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த குமாரசூரியர் தெய்வானைப்பிள்ளை அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
பாசத்திற்கும் பண்பிற்கும் அரவணைப்பிற்கும்
பாரில் இலக்கணமாய் விளங்கிய
எங்கள் அன்னையே!
உங்கள் முகம் கண்டு
ஆண்டு ஐந்து ஆனதோ அம்மா..!
நேசத்துக்கு என எங்களைப் பெற்றெடுத்து
ஆளாக்கி பேணிக்காத்து பெருவாழ்வு
எமக்களித்த எம் தாயே..!
நின் திருமுகம் கண்டு ஆண்டு ஐந்து ஆனதோ !
மரணம் உங்களை எங்களிடம் இருந்து பிரித்து விட்டாலும்
எங்கள் மனங்களில் இருந்து
உங்கள் நினைவுதனை பறித்திட முடியாதே!
கல்லறை வாழ்வில்
நெடுங்காலம் சென்றாலும்
எங்கள் நெஞ்சறைக் கூட்டில்
அழியாத ஓவியம் அம்மா நீங்கள்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
Heaven gained an angel ✨