

திருகோணமலை Orrs Hill உவர்மலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட குமாரசூரியர் தெய்வானைப்பிள்ளை அவர்கள் 13-04-2020 திங்கட்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பீற்றர் பாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி குமாரசூரியர் அவர்களின் அன்பு மனைவியும்,
யோகேஸ்வரி(பிரான்ஸ்), அகிலேஸ்வரி(சுவிஸ்), உமாமகேசன்(சன் மோட்டர் உரிமையாளர்), உமாசுதன்(இலங்கை துறைமுக அதிகாரசபை திருகோணமலை), உமாரஜனி(லண்டன்), உமாசுதனி(மாகாண காணி நிருவாக திணைக்களம் கிழக்கு மாகாணம் - திருகோணமலை), உமாசாந்தி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சதாசிவம், இராஜதுரை, விசாலாட்சி, கேமலதா, தவமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சௌந்தரராஜன்(சொந்தா- பிரான்ஸ்), ரவீந்திரன்(சுவிஸ்), பாசவதனி(ஆசிரியர் உவர்மலை விவேகானந்தா கல்லூரி), ஜமுனாவதி(சுதேச மருத்துவ திணைக்களம் கிழக்கு மாகாணம் - திருகோணமலை), ஜாபீர்(லண்டன்), முத்துக்குமார்(துறைமுக அதிகாரசபை திருகோணமலை), உதயசங்கர்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தீப்திகா, லிதுர்சன், கஜனேஸ், ரித்திஸ்கர் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
சுகாந், ஹஸ்மிகா, அருனேஸ், டினோஜ், கிஷோர், சமிஸ்தா, அக்சிதா, சச்சின் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-04-2020 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் திருகோணமலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Heaven gained an angel ✨