அன்பின் நண்ப வாழ்வு இனிது வாழ்வு இனிது என எம் வாழ்வின் இனிய தருணங்கள்தோரும் நிறைந்திருந்தாய். துயர் சூழும் தருணமெலாம் நாளை பலம்கொண்டு எழுந்திருந்தோம். வாழ்வு இனிது நண்ப. நாம் கூடிக் களிக்க இன்னும் நாட்கள் உள்ளதே நண்ப. முதுமைகூடி மறதிமூடி தொலையவில்லையே நம் காலம். இன்னும் உள்ளதே நாம் கூடிக்களித்திட நாட்கள். வாழ்வு இனிது நண்ப. இனி உன் குழந்தைப் புன்னகைக்கு ஏங்கி நிற்போம். சூரியர் என்று அழைத்து அணைக்கும் நெஞ்சு இன்றி நிற்போம். உன் கனிவான நல விசாரிப்பின்றி நிற்போம். உன வாழ்வு இனிது நண்ப அதைக் கொண்டாடி நிற்போம். யாழ் இந்துவின் மலை வேம்பின் வித்தெடுத்து குமாரசுவாமி மண்டபத்தின் மேலிருந்து தூவிவிட்டு அவை சுழன்று காற்றின் திசையின் அலையும் இதம் கண்டு களித்துக்கிடந்தோம். எம் வாழ்வும் தூவிவிட்ட மலைவேம்பின் வித்தாய் உலகமெலாம். வாழ்வு இனிது நண்பா. நம் நினைவுகளின் சுமைதானே வாழ்வு. உன் நினைவை சுமப்பதும்தானே நம் வாழ்வு. வாழ்வு இனிது நண்ப. உன் நினைவைச் சுமக்கும் இவ்வாழ்வு இனிது நண்ப. உன் வாழ்வைக் கொண்டாடுவோம். உன் வாழ்வைக் கொண்டாடுவோம் சூரியரே!!
Our heartfelt condolences