திதி: 14-10-2022
யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், ஐக்கிய அமெரிக்கா Tennessee ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த Dr. குமாரசூரியர் குமாரவேலு MD, அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
கண்களில் எம்மை சுமர்ந்தீர் கணப்பொழுதில்
எம்மை விட்டு கரைந்து விட்டீர் காற்றில்
இந்த மண்ணில் உன்னை போல் யார் வருவார்
எம்துயர் போக்க எண்ணிப் பதைக்கின்றோம்
விண்ணில் தேடுகின்றோம்
காற்றோடு கரைந்தாய் கடைசிமுகம் காட்டாது
அப்பா என நினைத்தாலே
அன்பு முகம் காட்டும் மனதில்
தீராத வடு எமக்கு தந்ததேனோ!
உடன்பிறப்பே எங்கள்
உயிர்ச் சகோதரனே!
உன்னைத் தேடி எங்கள்
கண்கள் களைத்ததையா...
அன்பின் பிறப்பிடமாய்...
பாசத்தின் ஒளியாய்...
அமைதியின் அடைக்கலமாய்...
திகழ்ந்த எம் சகோதரனே...!
உடல்கள் உயிரை பிரிந்தாலும்
உணர்வுடன் ஒன்றாகிப்போன
எமது உடன்பிறப்பே...
பார்க்கும் இடங்களெல்லாம்
உன் புன்னகை பூத்திருக்குதப்பா
நீ எம்மோடு இருந்து
வாழ்ந்த காலங்களை நினைக்கையில்
எம் இதயங்கள் துடிக்க மறுக்குதப்பா
காலம் எல்லாம் எங்களுடன் நீங்கள் இருப்பீர்கள்
என்று இருந்தோம் காலன் அதை
பொறுக்காமல் காவி விட்டான்
ஆண்டுகள் ஆயிரம் சென்றாலும்
உன் நினைவு மறவாது
என்றும் உங்கள் பிரிவால் வாடும்
உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள்
உங்கள் ஆத்மா சாந்திபெற
நயினை நாகபூசணி அம்மனைப் பிரார்த்திக்கின்றோம்..
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
Our heartfelt condolences