Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 14 FEB 1933
இறப்பு 20 MAY 2020
அமரர் குமாரசாமி தங்கவேலாயுதம் (துரைராஜா)
Elephant House Company Accountant Colombo & Trincomalee, Labour Union Secretary Colombo, New Town Shop Proprietor Trincomalee
வயது 87
அமரர் குமாரசாமி தங்கவேலாயுதம் 1933 - 2020 உடுப்பிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 22 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். உடுப்பிட்டியை பிறப்பிடமாகவும், அச்சுவேலி தெற்கு, நெதர்லாண்ட் ஆகிய  இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி தங்கவேலாயுதம் அவர்கள் 20-05-2020 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி மீனாட்சி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை சொர்ணம் தம்பதிகளின் மருமகனும்,

காலஞ்சென்ற ஜெயரட்ணமலர் அவர்களின் அன்புக் கணவரும், 

பூபாலராசா, விஜயராசா, ராசரத்தினம், வசந்தாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும், 

உதயகுமார்(ஜெர்மனி), கங்காதரன்(லண்டன்), உதயராணி(லண்டன்), கங்காரூபினி(பிரான்ஸ்), ரூபன்(நெதர்லாண்ட்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுசி, சுஜாதா, ராஜேஸ்வரன், தயாபரன், ரிஜிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நாதன், காலஞ்சென்ற நடேசலிங்கம் அவர்களின் மைத்துனரும்,

பிரணவன், பிரவீன், சுருதி, கலைக்சிகா, ஆர்த்தி, தனுயா, ரதியா, சன்சியா, தருண், கிபிகாஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டின் தற்கால சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதி நிகழ்வுகள் மிகக்குறைந்தகுடும்ப உறவினர்களுடன் மட்டுமே நடைபெறும்.

தினம் ஒரு சந்தோசம் தந்தீர்கள்
இன்று தினம் தினமாய் உங்களுக்காய்
அழுகின்றோம் அப்பா....

நீங்கள் பெற்ற பிள்ளைகள்
சந்தோசமாய் இருக்க அயராது உழைத்தீர்கள்
எம்மை விட்டு எங்கே சென்றீர்கள் அப்பா... 

 ஆறாத உமது நினைவுகளால்
மாறாத எமது கவலை என்றும்
வாராதா உமது இனிய முகம் 
காணாதா எமது கண்கள்

வாழ்க்கைப் பெருங்கடலில்
 வளமான வாழ்வை எமக்கு
அமைத்து தந்து வாழ்க்கை தலைவனே
தவிக்க விட்டு வானகம் சென்றீரோ!!! 
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!


தகவல்: குடும்பத்தினர்