Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 26 APR 1954
இறப்பு 27 NOV 2025
அமரர் குமாரசாமி பரமானந்தம்
ஓய்வுபெற்ற நீர்ப்பாசனத் திணைக்களப் பணியாளர்
வயது 71
அமரர் குமாரசாமி பரமானந்தம் 1954 - 2025 நெடுந்தீவு மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

திதி:16/11/2026
 
யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வன்னேரிக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த குமாரசாமி பரமானந்தம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பாளன்" அன்பும் பண்பும் அள்ளிநிறைத்த உள்ளம்!
அனைவரையும் அரவணைக்கும் அதிசய சொந்தம்!
ஆளுமையும் வாழ்வியலும் ஆனந்தக் கதை பேசும்!
ஆழமான பற்றுடனே அன்னைமண்ணை நேசித்தவர்!

 நெஞ்சம் மகிழும் நீண்ட நினைவுகள்!
தஞ்சமாய் எமை தாங்கிய பொழுதுகள்!
அஞ்சாத கொள்கையுடன் ஆலமர விருட்சமாக!
கொஞ்சமும் குறையா அன்பில் கொலுவிருந்த குலதெய்வம்!

 கண்முன் வாழ்ந்த வாழ்வு காலமெலாம் நாம் மறவோம்!
மண்ணிலே உங்கள் நேசம் மாறாது வாழும் நாளும்!
உண்மையின் தியாகத்தாலே ஊரின் உயர்வு தேடி!
பண்பின் பாதை காட்டிய பாசத்தின் மாமனிதர் நீங்கள்!

 அன்பான கணவராக, ஆசை அப்பாவாக, அன்பு நிறை மாமாவாக,
அருமையான அம்மப்பாவாக, அரவணைக்கும் அப்பப்பாவாக,
ஆசை மகனாக, அன்புப்பெறாமகனாக,மருமகனாக, மைத்துனராக,
சம்மந்தியாக, சகலனாக, பெரியப்பாவாக, சித்தப்பாவாக தாத்தாவாக
அத்தனை உறவுமாக வாழ்ந்த அன்பாளன் ஐயா நீங்கள்!

 இனிதான வாழ்வு மறந்து இறை ஆதி சிவசக்திபாதம் அடைந்து ஓராண்டு ஆனதையா!
எங்கள் அன்பாளனின் ஆன்மா சாந்திக்காய் எல்லாம் வல்ல எம்பெருமான்
தாள் பணிந்து நாகதம்பிரான் துதி போற்றி பிரார்த்திப்போமாக!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

தகவல்: உங்கள் பிரிவால் வாடும் மனைவி,பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.