Clicky

பிறப்பு 22 DEC 1967
இறப்பு 24 AUG 2020
அமரர் குலசேகரம் ஜெயகாந்தன்
மென் பொறியியலாளர்
வயது 52
அமரர் குலசேகரம் ஜெயகாந்தன் 1967 - 2020 காரைநகர், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Thava Iyer 28 AUG 2020 Australia

ஜெயகாந்தன் ஆத்மா சாந்தியடையபட்டும்!!! குமுறல்கள்......... கொஞ்சமாய் நம்மிடம் பழகியிருந்தாலும், நெஞ்சமெல்லாம் நிறைந்திருந்தாயே! கொஞ்சும் உன் குமிண் சிரிப்பாலும், மிஞ்சும் உன் கருணையாலும், பஞ்சினினும் மிருதுவான பேச்சாலும், நெஞ்சில் வஞ்சமில்லா உள்ளத்தாலும், கெஞ்சினும் மிஞ்சினும் வெஞ்சினமடையா தன்மையாலும், நண்பர் நெஞ்சமெல்லாம் கொள்ளை கொண்டிருந்தாயே!! இன்று, நம் நெஞ்சை சுக்குநூறாக்கி சென்றாயே! அன்று பெராவில் முதன் முதலில் நாம்  வந்த போது, ஒன்றாக பல சிரமங்கள் மனவழுத்தங்கள் எதிர்கொண்டபோதும், நன்றாக, நட்பாக, கண்ணியமாக நீ பேசி நம்மை அமைதியடைய வைத்தாயே! இன்றுவரை அதே கண்ணியமான கரிசனையான உன் பேச்சினை தொடர்ந்திருந்தாயே! நல்லதோர் மாணவனாய்,  கல்வியில் வல்லவனாய்,  வேலையில் கடும் உழைப்பாளியாய், நல்லோர் போற்றும் குணவானாய், எல்லாக்கணமும் பொறுமையின் சிகரமுமாய், இல்லத்தாளின் இனிய கணவனாய், செல்லக் குழந்தைகள் மூன்றிற்கு பொறுப்பான தந்தையாய், அல்லல் ஆய்ந்தறிந்து அயலாருக்கும்,  நண்பருக்கும்,  ஆவன செய்து நல்லமாய் பேசி ஆறுதலளிக்கும் அன்பனாய், பொல்லா வினைகள் போக்கும் சிட்னி முருகனையும், பொல்லாததனை பொசுக்கும் சிட்னி துர்க்கையம்மனையும் , எல்லா நாளும் சிரத்தையாய் துதிக்கும் பக்திமானாய், துல்லிய சிந்தனையுடன் குடும்பத்திலும் சமூகத்திலும் உயர்ந்திருந்தாயே!... சில நினைவுகள்... சில வருடம் பூப்பந்து விளையாடி மகிழ்ந்திருந்தோமே? அதில் சில சமயம் போட்டி உச்சத்தில் இருந்தாலும் உன் ப‌ொலிவான சிரிப்பு உன் முகத்தில் என்றும் குறையாமல் நிறைந்திருந்ததே! பல தடவை கோவிலில் பார்த்த போதும் உன் குலையாத சிரிப்பு  நிலையாக நின்றிருந்ததே!! நல்லதோர் வீணை செய்து, அது உச்சமாய் ஒலிக்கையில், மெல்லமாய் அதை நலங்கெட புழுதியில் எறிந்தானே படைத்தவன் இன்று! தில்லைக்கூத்தனே உனக்கு வீணையின் கானம் கேட்டிலையோ? அல்லது வாழ்வதன் அல்லல் நீக்கிடவே நல்லோர் ஆயள்தனை குறைத்துவிடுவாயோ?, என்றாலும்..., நம் நினைவுகளில் என்றும் நீ நிலையாக  வாழ்ந்திருப்பாய்! உன் கனவுகளும், நினைவுகளும்  உரமூட்ட, உன் நற்சேவைகளும், நன்னெறி பக்தியும் வரமீட்ட, உன் நண்பரும் உற்றாரும் ஒன்றாய் கரம் நீட்ட, உன் மனை மக்கள் மெதுவாக திடமேற்றி, நிச்சயம்  மீண்டெழுந்திடுவர்! உன் கனவுகளுக்கு உயிர் கொடுக்க!!! ஆதலால் நண்பனே நீ அமைதியாய் மீளாத் துயில் கொள்வாய்!

Summary

Notices

மரண அறிவித்தல் Sat, 29 Aug, 2020
நன்றி நவிலல் Wed, 23 Sep, 2020