ஜெயகாந்தன் அவர்களினது மரணம் எம்மால் இலகுவில் ஜீரணிக்க முடியவில்லை. அவருடைய முகம் அவர் எப்பேற்பட்ட கருணை உள்ளம் கொண்ட பண்பாளன் என்பதை பறைசாற்றி நிற்கின்றது. இளவயது மரணம் எத்தகைய கொடியது என்பதை இளவயதில் தம் உறவுகளைப் பறிகொடுத்துப் பரிதவிக்கும் உறவுகளால் மட்டும் தான் ஜீரணிக்கமுடியும்
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர்களினது கவலைகளில் நாமும் பங்கு கொள்வதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திப்போமாக! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!