5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பேரம்பலம் குகதாசன்
(குகன்)
பழைய மாணவர் - ஸ்கந்தவரோதயாக் கல்லூரி சுன்னாகம்
வயது 49
Tribute
3
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Langenthal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பேரம்பலம் குகதாசன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
மூச்சுப் போய் ஐந்தாண்டுகள் ஆனதா?
இல்லை உன் முத்துச் சிரிப்பு தொலைந்து போனதா?
என்னவென்று விம்புவேன் உம் இழப்பை
ஆண்டுகள் அழிந்தாலும் அழியாது உம் நினைவுகள்!
காலத்தால் எமை விட்டு நீர் பிரிந்தாலும்
உம் நினைவு எமை விட்டுப் பிரியவில்லை
நாம் இங்கே தவித்து நிற்க
எமை விட்டுப் போனதெங்கேயோ?
காலங்கள் மாறலாம்
உங்களை இழந்த
ஆண்டுகள் மாறலாம்!
உங்களுடன் வாழ்ந்த இனிய
நினைவுகள் காலத்தால்
எப்போதும் மாற்ற முடியாது!
உன் நினைவுகள் தரும் கண்ணீர்
இவ்வுலகில் நாம் வாழும் வரை
வற்றிப் போகாது...
உன் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கின்றோம்!!!
தகவல்:
குடும்பத்தினர்