

யாழ். மயிலிட்டி தெற்கு கட்டுவனைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த குட்டித்தம்பி இரத்தினசிங்கம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்பு உறவே அப்பா!
எங்கு தேடுவோம் உமை அப்பா!
கண்ணைக் காக்கும் இமை போல
எம்மைக் காத்த எம் அப்பா!
வீசும் காற்றினிலும்
நாம் விடும் மூச்சினிலும்
எட்டு திக்குகளிலும் உம்
நினைவால் வாடுகிறோம் அப்பா!
அன்பையும் பண்பையும்
பொழிந்த நீங்கள்
ஒரு நொடியில் மறைந்ததேன்?
இனி எப்போ எம் முகம் பார்ப்பாய்?
உன் புன்முகம் பார்க்க ஏங்கித்
தவிக்கின்றோம் அப்பா!
எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்கே
உங்கள் அரவணைப்பில்
இல்லறம் வாழ்ந்திருந்தோம்
இன்று நாம் தவிக்கின்றோம்
நீங்கள் இன்றி...
ஏங்குகின்றோம் உங்கள் பாசத்திற்காய்
ஆறாத்துயருடன் அன்பையும்
பாசத்தையும் காட்டி
உங்கள் கண்களுக்குள் வைத்து
வழிகாட்டி வளர்த்தீர்கள்!
இன்று நம் கண்ணீர் நிறைந்த
கண்கள் உம்மை தேட
எம் மனமோ உங்களின்
அன்புக்காய் ஏங்கித் தவிக்கிறதே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
ஓம்சாந்தி! ஒம்சாந்தி!! ஒம்சாந்தி!!!
Rip