யாழ். மயிலிட்டி தெற்கு கட்டுவனைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த குட்டித்தம்பி இரத்தினசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:18/07/2022
ஆண்டொன்று சென்றாலும்
அழியவில்லை எம் சோகம்
மாறாது
எம் துயரம்
மறையாது உங்கள்
நினைவு ஆறாத்துயரில்
ஆழ்த்தி
விட்டு மீளாத்துயில்
கொண்ட எம் அப்பாவே
அப்பா அப்பா என்று நாங்கள்
அழைக்கிறது
ஆனாலும்
நீங்கள் வரவில்லையே
அப்பா
புன்னகை பூத்த பொன்முகம்
எம்
கண்முன்னே தெரிகிறது
அப்பா ஆனாலும்
அது நிஜமில்லை
என்று
தெரிந்த பின்பு நெஞ்சு
கனக்கிறது
அப்பா விழிநீர்
சொரிகிறது
அப்பா
வேதனையில் துடிக்கின்றோம்
பாசமிகு அப்பாவே நேசமுடன்
உமை நினைக்க மறுபிறப்பு
உண்டென்றால் எம்மடியில்
வந்து விடுங்கள் அப்பா
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்.
ஓம்சாந்தி! ஒம்சாந்தி!! ஒம்சாந்தி!!!
Rip