2ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
7
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். மத்தொனி கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா London Croydon ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கிருஷ்ணபிள்ளை சிவமைந்தன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 08-11-2025
ஈவிரண்டு ஆண்டுகளாய் உங்கள் பூமுகம் காணாமல்
ஏங்கித் தவியாய் தவிக்கின்றோம்,
ஓடியோடி வந்து உதவிடும் உன் கரங்கள்
இன்று எங்களோடு இல்லை
பாதி வழியில் பாசங்களை அறுத்தெறிந்து
தூர நீங்கள் சென்றதேனோ?
வதனங்கள் மட்டும் போதும் என்று
புன்னகைக்கு வெண்ணிலவாய்
போட்டோவில் ஒளி தந்து புன் சிரிப்புடன்
எங்களை வாழ்த்தி நிற்கும் தெய்வமே!
நிழலாக இல்லாமல் நிஜமாக வந்திடுவீர்!
காலங்கள் கடந்து சென்றாலும்
ஒவ்வொரு நொடிகளிலும் இதயத்தின்
துடிப்பைப் போல் அருகிலே
நீங்கள் வாழ்வதை நாங்கள் உணருகின்றோம்..
ஈராண்டு கடந்தாலும் எம் இதயத் தெய்வத்திற்கு
நீங்காத நினைவுகளால் என்றென்றும் வணங்கிடுவோம்
தகவல்:
குடும்பத்தினர்
Losing someone is hard specially appa or husband is even harder to take it. Hope the god gives you loads of strength to keep your life together and happier.