2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 27 FEB 1956
இறப்பு 23 JUN 2019
அமரர் கிருஸ்ணபிள்ளை செல்வநாயகம் (தங்கக்கிளி)
வயது 63
அமரர் கிருஸ்ணபிள்ளை செல்வநாயகம் 1956 - 2019 வல்வெட்டித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வல்வெட்டித்துறை பொலிகண்டி தெற்கு புதுவளவைப் பிறப்பிடமாகவும், மாவோடையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிருஸ்ணபிள்ளை செல்வநாயகம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு இரண்டு போனாலும்
அழியாது எம் சோகம்

மீண்டுதான் வருவாயோ என
பதைக்குதையா எம் தேகம்

வேரோடு பிடுங்கப்பட்ட
செடி, கொடி போல் உயிரிழந்தோம்

காரிருள் நேரமதில் நடுக்காட்டில்
தொலைந்தது போல் தவிக்கின்றோம்.


கல்யாண வீடென்றால்
கதாநாயகன் நீதான்

மரண வீடென்றாலும்
கட்டளைத் தளபதி நீதான்

கோயில் நிகழ்வுகளில்
கோமகனும் நீதான்

நோயில் படுத்த பின்னும்
புதுவளவின் நெறியாளன் நீதான்


காலங்கள் அழியும்; கோலங்கள் கலையும்;
உன் நினைவுகளோ என்றும்
நீங்காது தொடரும்

தகவல்: மனைவி மற்றும் குடும்பத்தினர்.