யாழ். புலோலி தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணபிள்ளை கமலாதேவி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 08-07-2022 வெள்ளிக்கிழமை அன்று காலை 06.00 மணியளவில் பெரியதேவனத்தாய் பிள்ளையார் கோயில் அந்தியேட்டி மடத்தில் நடைபெறும் அந்நிகழ்விலும் அதனைத்தொடர்ந்து நண்பகல் 12.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெறும் சபிண்டீகரண நிகழ்விலும் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
முகவரி:
கமலாலயம்,
பெரியதேவனத்தாய்,
புலோலி தெற்கு, புலோலி.
Our Heartfelt condolences to Chelvi and family