

யாழ். புலோலி தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணபிள்ளை கமலாதேவி அவர்கள் 08-06-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், தங்கம்மா தம்பதியினரின் மூத்த புதல்வியும், காலஞ்சென்ற பரமு, தங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
செந்தாமரை(இந்தியா), மணிவண்ணன்(பொஸ்வானா), பொற்செல்வி(ஐக்கிய அமெரிக்கா), பரந்தாமன்(கனடா), துளசி(கனடா), சாரங்கன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
முருகமூர்த்தி(இந்தியா), சுகந்தி(பொஸ்வானா), வைகுந்தன்(ஐக்கிய அமெரிக்கா), சுபாஷினி(கனடா), உதயன்(கனடா), தாட்சாயனி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான ஜெயதேவி, விமலாதேவி மற்றும் புண்ணியமூர்த்தி, சற்குணநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கனகம்மா, சிவலிங்கம் மற்றும் இலட்சுமிப்பிள்ளை ஆகியோரின் மைத்துனியும்,
காயத்ரி, ராம்சங்கர், கீர்த்தனா, சைந்தவி, நவநீதன், மாதினி, கிருஷ்ணன், வராகன், கார்த்திகன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 09-06-2022 வியாழக்கிழமை அன்று உபயகதிர்காமம் புலோலியில் உள்ள கமலாலயத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் ஆனைவிழுந்தான் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our Heartfelt condolences to Chelvi and family