உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், கரம்பன், யாழ்ப்பாணம், கொழும்பு வெள்ளவத்தை, மொரட்டுவ சொய்சாபுரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிருஷ்ணபிள்ளை அன்னம்மா அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
நான்கு ஆண்டுகள் நகர்ந்தாலும்
எம்மை விட்டு அகலாது உங்கள் நினைவு
நினைவுகள் வருகையில்
நிலைகுலைந்து போகின்றோம் எங்கள் அம்மம்மா, அப்பம்மா
காணும் காட்சிகளில்
கண்முன்னே நிற்கிறீர்கள் எமதருமைப் பூட்டி
உங்களை நினைக்காத நாட்களில்லை
எங்கள் நெஞ்சை விட்டகலமாட்டீர்கள் எமதுயிருள்ளவரை
உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும்
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்