யாழ். தெல்லிப்பழை வித்தகபுரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Stuttgart ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கிருஷ்னர் விமலநாதன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 17-05-2024
நான்கு ஆண்டுகள்
ஒரு நிமிடமாக கரைந்துவிட்டது
தீராத ஏக்கத்துடன் இன்னமும்
துடிக்கின்றது எம் இதயம்
உங்கள் இனிய புன்னகை மீண்டும்
ஒருமுறை காண்போமா...
என்னை எங்களை தனியாக தவிக்க வைத்தாய்
நீங்கள் மட்டும் கல்லறையில் மீளாநித்திரையில்
நாங்களோ உங்கள் நினைவுகளோடு வேதனையுடன்
தனிமையில் தவித்து மாள்கிறோம் அப்பா
உங்களையே உலகமென
உறுதியாய் நாமிருக்க
ஏன் விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீரோ?
ஆருயிர் துணை இழந்து
அன்னை படும் துயரம்
ஆற்ற முடியாமல்
கண்ணீரினில்
நாம் கலங்கி தவிக்கின்றோம்
நீங்கள் எங்கு சென்றாலும்
எங்கள் நினைவு
உங்களை சுற்றி வரும்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!