மலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், யாழ்.கந்தர்மடம், இந்தியா சென்னை , கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கிருஷ்ணகுமாரி நடராஜா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
வாழ்கை என்னும் பாதையிலே
எம்மோடு பயணித்த தெய்வமே!
இன்றுடன் ஒரு மாதம் முடிந்தாலும்
உங்கள் நினைவுகள் எம்மை விட்டு விலகாது!
உங்களையே உலகமென உறுதியாய் நாமிருக்க
ஏன் விண்ணுலகம் நிரந்தரமாய் விரைந்தீரோ?
31 நாட்கள் என்ன ஓராயிரம் வருடங்கள் ஆனாலும்
உங்கள் நினைவாய் வாழ்ந்திடுவோம்!!
உங்கள் ஆத்மா ஆண்டவனின் திருவடியில்
அமைதி பெற வேண்டுகிறோம்!
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Our condolences to the family of Mrs Krishnakumary