Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 23 OCT 1938
இறப்பு 15 JUL 2025
அமரர் கோவிந்தபிள்ளை செல்வராஜா
வயது 86
அமரர் கோவிந்தபிள்ளை செல்வராஜா 1938 - 2025 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

திதி: 04-07-2026

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், இருபாலை கோப்பாயை வதிவிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கோவிந்தபிள்ளை செல்வராஜா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு ஒன்று ஆனாலும் அழியவில்லை
எம்சோகம் மாதங்கள் பன்னிரண்டு என்ன
யுகங்கள் பதினெட்டு ஆனாலும் மாறாது எம்துயர்
மறையாது உங்கள் நினைவு...!

ஆறுதல் சொல்ல ஆண்டவனே வந்தாலும்
அப்பா உம் ஆரூயிர் அன்புக்கு ஈடாகுமா?
சிந்தை குளிர சிரிப்பொலி ஓலிக்கும் அன்பு வதனம் எங்கே?
இன்று எல்லாம் பகல் கனா போல முடிந்தது அப்பா!

வானம் கைகளால் பிடிக்க முடியாத தூரத்தில் இருந்தாலும்
நிலவை அன்னத்தில் கதையாக்கி ஊட்டிடுவாய் நெஞ்சில்
நம்பிக்கை எனும் விதையை விதைத்த முதல் கடவுள் நீங்கள்!

உள்ளத்தில் பல கனவு ஒன்றாக நாமும் கண்டோம்
கனவெல்லாம் நனவாகும் காலம் வருமுன்னே
கண்மூடி மறைவாய் என்று கனவிலும் நினைக்கவில்லை

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..

அன்னாரின் முதலாம் ஆண்டு திதி 04-07-2026 மு.ப 10.30 மணியளவில் 353 9/C, Manna Road, Veppankulam, Vavuniya என்ற முகவரியிலுள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற உள்ள ஆத்மா சாந்தி பிரார்த்தனையில் பங்குபற்றுவதோடு அதனை தொடர்ந்து நடைபெறும் மதிய உணவில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்!

தகவல்: குடும்பத்தினர்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

JEE அண்ணாவின் அப்பாவின் ஆத்ம சாந்திக்காக பிராத்திப்பதோடு அவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள் ஜெயந்தன் குடும்பம் ஐக்கிய இராச்சியம்

RIPBook Florist
United Kingdom 11 months ago