
யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், இருபாலை கோப்பாயை வதிவிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட கோவிந்தபிள்ளை செல்வராஜா அவர்கள் 15-07-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கோவிந்தபிள்ளை யோகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற இராஜலட்சுமி செல்வராஜா அவர்களின் அன்புக் கணவரும்,
செல்வேந்திரகுமாரி(ஜேர்மனி), காலஞ்சென்ற இராஜேந்திரகுமார், ஜிதேந்திரகுமார்(பிரித்தானியா), செல்வகேந்தினி(Co - operative Development Officer- ACCD office, வவுனியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற செல்வராணி, சிதம்பரராஜா, அற்புதராணி, சீராழதேவன், அருள்ராணி, சிவரஞ்சன், கணேசவேல் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கணேசன்(ஜேர்மனி), வனஜா(பிரித்தானியா), தயாசீலன்(Regional manager- Ceylinco life- வவுனியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிஷாணி(ஜேர்மனி), தசித(ஜேர்மனி), றொஷாணி(ஜேர்மனி), கிரீஷன்(பிரித்தானியா), தட்ஷின்யா(பிரித்தானியா), சாருகா(வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயம்), விதுர்ஷிகா(வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயம்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-07-2025 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் 353/9C, Mannar Road, Vavuniya எனும் முகவரியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் வவுனியா தட்சணாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
JEE அண்ணாவின் அப்பாவின் ஆத்ம சாந்திக்காக பிராத்திப்பதோடு அவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள் ஜெயந்தன் குடும்பம் ஐக்கிய இராச்சியம்