Clicky

தோற்றம் 11 AUG 1942
மறைவு 11 AUG 2022
அமரர் கோமளாதேவி சிவபாலசுந்தரலிங்கம்
BA (Hons) MA
வயது 80
அமரர் கோமளாதேவி சிவபாலசுந்தரலிங்கம் 1942 - 2022 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Birth
11 AUG, 1942
Death
11 AUG, 2022
Late Komladevi Sivapalasundaralingkam
திருமதி கோமளாதேவி சிவபாதசுந்தரலிங்கம் அவர்கள் எமது பாடசாலையின் கல்வி வளர்ச்சியில் ஆற்றிய பங்கு அளப்பரியதாகும். .எமது மாவட்டம் ஒரு பின்தங்கிய பிரதேசம்.இதைஉணர்ந்த காரணத்தால் ஆசிரியை கோமளா அவர்கள் அங்கேயே தங்கி இருந்து கடமை புரிந்தார்கள். .அங்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் பெரும்பாலும் யாழ்ப்பாணத்தில் இருந்து நாள்தோறும் பயணம் செய்பவர்களே.அல்லது கிழமை நாட்களில் பெரும்பகுதியைப் பயணத்துக்கு ஒதுக்குபவர்களாகவே இருந்தனர். 73ம் ஆண்டில் இருந்து 85ம் ஆண்டு வரை எமது பாடசாலையின் கல்வி வளர்ச்சியில் அரசியல்வாதிகளின் தலையீடு காரணமாக நாம் மேலும் பாதிப்புக்கு உள்ளானோம். .வடமாகாணத்தோடு ஒப்பிடுகையில் எமக்கு கல்வித்தரம் குறைந்த நிலையில் இருக்கும்.இந்நிலையை மாற்ற அதனது தனிப்பட்ட நேரத்தைத் தியாகம் செய்து அமரர் அருந்தொண்டாற்றினார். திரு திருமதி கோமளாதேவி சிவபாதசுந்தரலிங்கம் அவர்கள் பெற்றார் ஆசிரியர் என்பதையும் தாண்டி நலன் விரும்பிகள் என்ற அடிப்படையில் அளப்பரிய தொண்டு செய்தனர் . பெற்றோர் ஆசிரியர் சங்கக்கூட்டத்தில் நிதி மோசடிகளை அம்பலப்படுத்தியதைச் சகிக்கமுடியாத அரசியல்வாதிகள் திட்டமிட்ட காடைத்தனத்தை அரங்கேற்றினர். ஆசிரியை அவர்களின் கணவரும் , பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவருமான அமரர் வழக்கறிஞராகவும் , பதில்சி நீதவானாகவும் புகழ பெற்றிருந்த திரு சிவபாலசுந்தரலிங்கம் . அவர்கள் தாக்கப்பட்டார்.தாக்குதலை வழிநடத்திய அன்றைய பா . உ “ எங்களுக்கு பட்டுக் குஞ்சங்கள் தேவையில்லை, சொல்பேச்சுக் கேட்பவர்களே தேவை” என்று பகிரங்கமாக முழங்கினார். ஒரு பாடசாலையின் கல்வி வளர்ச்சியில் பங்காற்றியவர்கள் தாக்கப்பட்ட கொடுமையும் அங்கு தான் நடந்தேறியது.அதற்குபின்பும் மனம் தளராமல் துணிச்சலாக தன் பணிகளை செய்து முடித்த பெருமை திரு திருமதி கோமளாதேவி சிவபாதசுந்தரலிங்கம் அவர்களையே சேரும்.இதைபொறுத்துக்கொள்ள முடியாது கயவர்கள் எமது பாடசாலையின் நிதி ஒதுக்கீடு ஆசிரியர் நியமனம் போன்றவற்றை கூட சீரழித்து வளர்ச்சிக்கு தடையாக இருந்தனர்.
Write Tribute