
யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு கணுக்கேணி கிழக்கை வதிவிடமாகவும் கொண்ட கோமதிஅம்மா காசிநாதர் அவர்கள் 11-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், சபாரத்தினக்குருக்கள் லக்சுமிஅம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காசிநாதர்(ஆசிரியர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
சூரியகுமாரி, கலைவாணி, காலஞ்சென்ற கிருஷ்ணராஜாசர்மா, சுகுமார்(ஆசிரியர்- முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி), திருமகள்(செல்வி), அருள்மதி, அங்கையர் கண்ணி(மாம்பழம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
டாக்டர் கணேசமூர்த்தி, நந்தகுமாரக்குருக்கள், சகுந்தலா, யமுனா, குமாரதாஸ்க்குருக்கள்(கனடா), சுரேஸ்குமாரக்குருக்கள்(பிரான்ஸ்), சுஜித்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியும்,
சுவர்ணா, சுஜிந்தன், சோபனா, ராஜீவன், கம்ஷா, கீர்த்திகா, பிரகலாத், கோபிகா, தீபிகா, பிரிஜங்கா, பரணிகா, சுகாத்திரி, திவ்விஜாங்கி, சபரி, அவினாஸ், அஞ்சலோ ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-10-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை கணுக்கேணி கிழக்கில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் மாவடி பிளவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வணக்கம். இது கனடாவைச் சேர்ந்த சசி. வாணி அக்கா மற்றும் அனைத்து குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபம்.