யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Frankfurt ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிருபாகரன் சோமசுந்தரம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்பு அப்பாவே
இதயத் துடிப்பின் அருமருந்தே
காலம் செய்த கோலத்தினால்
ஒவ்வொரு கணப் பொழுதும்
துடிக்கின்றோம்!
ஆண்டு இரண்டு ஆனாலும் மனம்
ஆற மறுக்கிறது- அப்பா
புன்னகை புரியும் உங்கள்
முகம் தெரிகிறது தினம் தினம்!
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வானடைந்து
இரண்டு ஆண்டு ஆனாலும் ஐயா
ஆறாது உங்கள் பிரிவுத்துயர்!
அன்பாலும் பண்பாலும் அரவணைத்து
எம்மை வழிநடத்திய அந்த நாட்கள்
எம் நினைவலைகளில் என்றும் சுழல்கிறதே ஐயா!
நீங்கள் எம்மை விட்டு நீண்டதூரம் சென்றாலும்
உங்கள் அறிவுரைகள் அரவணைப்புக்கள்
என்றும் எங்கள் நெஞ்சங்களில் உயிர்வாழும் ஐயா!
மறையாத உங்கள் நினைவு!
மீண்டும் ஒரு பிறவி உண்டென்றால்
உங்களுக்கு பிள்ளைகளாக பிறக்கும்
பேறு பெற வேண்டும்- அப்பா!
என்றென்றும் உங்கள் நினைவுகளோடு
வாழ்ந்து கொண்டிருக்கும்
உங்கள் அன்பு மனைவி, பிள்ளைகள்,
மருமகன், பேரப்பிள்ளைகள், சகோதரங்கள்
மற்றும் உற்றார், உறவினர்கள்...
அமரர் கிருபாகரன் சோமசுந்தரம் அவர்களுக்கு எங்கள் கண்ணீர் காணிக்கை ... பாசமிகு வனஜா அக்கா உங்கள் அன்பானவரின் பிரிவால் துயருற்றிருக்கும் உங்களுக்கும்,குடும்ப உறவுகளுக்கும் எனது குடும்பம் சார்பாக ஆழ்ந்த...