1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
11
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Frankfurt ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிருபாகரன் சோமசுந்தரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பே உருவான எங்கள் அப்பா
ஆண்டு ஒன்று ஆகிவிட்டதப்பா
இறைவன் உங்களை
ஏன் சீக்கிரம் அழைத்தான்?
ஈடில்லா எங்கள் பொக்கிஷமே அப்பா
உயிரான அம்மாவையும், தம்பியையும்
ஏன் மறந்தீர்கள்?
ஊட்டி வளர்த்த உறவுகளையும்
சகோதரங்களையும் ஏன் மறந்தீர்கள்?
எழுந்து வர மாட்டீர்களா அப்பா?
ஏங்குகிறது மனம் இரவும் பகலும்
ஐந்தும் பத்துமாய் தேடும் பேரக்குழந்தைகள்
ஒட்டி உறவாடும் நண்பர்கள்
அத்தனையும் மறந்துவிட்டீர்களா?
ஓடி ஒருமுறை வாருங்கள் அப்பா?
எங்களுக்குள் நீங்கள் வாழ்வதால்
நாங்களும் வாழ்கிறோம்!
உங்களுக்கு நிகராக
யாரும் இல்லயப்பா?
எம் நெஞ்சில் நீங்காமல்
வாழும் எங்கள் இதயத் தீபமே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்
அமரர் கிருபாகரன் சோமசுந்தரம் அவர்களுக்கு எங்கள் கண்ணீர் காணிக்கை ... பாசமிகு வனஜா அக்கா உங்கள் அன்பானவரின் பிரிவால் துயருற்றிருக்கும் உங்களுக்கும்,குடும்ப உறவுகளுக்கும் எனது குடும்பம் சார்பாக ஆழ்ந்த...