Clicky

பிறப்பு 17 MAR 1959
இறப்பு 27 MAY 2020
அமரர் நாகரட்ணம் கிரிதரன்
வயது 61
அமரர் நாகரட்ணம் கிரிதரன் 1959 - 2020 வயாவிளான், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Anu Yoges (Anuradha ) London 31 MAY 2020 United Kingdom

கிரி அண்ணா!!! கிரி அண்ணா!!! என்று அன்புடன் அழைத்த கிரி அண்ணா இவ்வுலகை விட்டு நிரந்தரமாக விடைபெற்று விட்டீர்கள்............. இடிபோல ஓர் செய்தி உலகே இருண்டது போல் நான் கனடாவில் இருந்த காலத்தில் கிரிஅண்ணா வுடனும் சுமதியுடனும் பழக எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. நான் தனியாக Canada Montrealல் வாழ்ந்த காலத்தில் கிரி அண்ணாவும் சுமதியும் எனக்கு செய்த உதவிகளை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. என்னுடன் மிகவும் அன்பாக பழகினார்கள். கிரி அண்ணா என்னை தனது சொந்த சகோதரி போல் கவனித்தார். மிகவும் அன்பானவர், நல்ல குணமானவர் எப்போதும் சிரித்தமுகமானவர். என்ன உதவி கேட்டாலும் மறுக்காமல் சந்தோசமாக உதவி செய்வார். மற்றவர்கள் அனைவரும் நல்லாய் வாழ வேண்டும் என நினைத்த நல்ல மனசுள்ள கிரி அண்ணாவிற்கு ஏன் இப்படி ஓரு கொடிய நோய் வந்ததோ!!! கடவுள் கிரி அண்ணாவை காப்பாற்றுவார் என நம்பினேன். ஆனால் வந்த செய்தியோ இடி விழுந்தது போல் இருந்தது. இனி எங்கே கிரி அண்ணாவை காண்போம். இத்துணை விரைவில் மரணம் உங்களை அரவணைக்கும் என்பதை நாம் எவருமே எதிர்பார்க்கவில்லை. கிரி அண்ணா சுமதி குடும்பத்தினருடன் ஓன்றாய் பழகிய அந்த இனிமையான நினைவுகளை மீட்டுபார்க்கின்றேன். பழகிய நினைவுகள் பசுமையானவை. சென்று வாருங்கள் கிரி அண்ணா !!!!!! கிரி அண்ணாவின் ஆத்மா சாந்தி அடைய எமது பிரார்த்தனைகள். உ ங்கள் பிரிவால் வாடும் உங்கள் மனைவி சுமதி , உங்கள் பிள்ளைகள், மணிTeacher , கண்ணன் அண்ணா, நாவலன், அகிலன்,சபேசன், கெளரி மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்!!!. அமைதி பெறட்டும் .. ஓம் சாந்தி!!!!

Tributes

Summary

Notices

மரண அறிவித்தல் Wed, 27 May, 2020