யாழ். வயாவிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட நாகரட்ணம் கிரிதரன் அவர்கள் 27-05-2020 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகரட்ணம்(ஓய்வு பெற்ற ஆசிரியர்- மத்திய மகாவித்தியாலயம், வயாவிளான்), சரஸ்வதி தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்ற கருகம்பனை செல்வத்துரை, மனோன்மணி(கனடா) தம்பதிகளின் அருமை மருமகனும்,
சுமதி அவர்களின் பாசமிகு கணவரும்,
தர்ஷன், மதுஷன், நிருஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சண்முகரட்ணம்(ஓய்வு பெற்ற ஆசிரியர்- மகாவித்தியாலயம், அச்சுவேலி), அருந்தவரட்ணம்(கண்ணன்- கனடா) ஆகியோரின் பாசமிகு தம்பியும்,
இந்துமதி, கேதாரகெளரி, நாவலன், அகிலன், சபேசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டின் தற்கால சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதி நிகழ்வுகளில் 10 பேராக சுழற்சி முறையில் கலந்து கொண்டு அஞ்சலி செலுதி கொள்ளலாம்.
கிரி அண்ணா!!! கிரி அண்ணா!!! என்று அன்புடன் அழைத்த கிரி அண்ணா இவ்வுலகை விட்டு நிரந்தரமாக விடைபெற்று விட்டீர்கள்............. இடிபோல ஓர் செய்தி உலகே இருண்டது போல் நான் கனடாவில் இருந்த காலத்தில்...