வைகாசி 10, எனது பிறந்தநாள் அன்று அழைப்பெடுத்து மனமாற வாழ்த்தினாய், கதைத்தாய். உடல் நலம் குறித்து நேர்மறையாக கதைத்தாய் ஆனால் 17 தினங்கள் கழித்து மௌனித்துவிட்டாய். இறைபத்தியுடன் நல்ல குடும்ப தலைவனாக இருந்தாய், உறவுகளின் இணைப்பு சங்கிலியின் மையப்புள்ளியாக இருந்தாய். நோய்யுற்றபோதும் எல்லோருடனும் தொடர்பிலிருந்தாய். நீ நன்றாக வாழ்ந்தமையை பொறுக்காத தர்மராசன் உனக்கு அழைப்பைக்கொடுத்து சுமதிக்கும் பிள்ளைகளுக்கும் பேரிழைப்பினை ஏற்படுத்திவிட்டான். பிறந்தவர் இறப்பர் என்பது இயற்கையின் நியதி. அது உனக்கு விரைவில் நடந்தமையைத்தான் ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது. சொர்க்கத்தில் இறைவனடி சேர்ந்த உன் உன்னத ஆத்மா சாந்தியடைய நான் இறைவனை பிராத்தனை செய்கின்றேன். நிச்சயமாக உன் குடும்பத்திற்கு என்றும் காவலனாக இருப்பாய்.
கிரி அண்ணா!!! கிரி அண்ணா!!! என்று அன்புடன் அழைத்த கிரி அண்ணா இவ்வுலகை விட்டு நிரந்தரமாக விடைபெற்று விட்டீர்கள்............. இடிபோல ஓர் செய்தி உலகே இருண்டது போல் நான் கனடாவில் இருந்த காலத்தில்...