யாழ். அச்சுவேலி வளலாயைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Alfortville ஐ வதிவிடமாகவும் கொண்ட கிட்டினன் யோகராசா அவர்களின் நன்றி நவிலல்.
பண்பில் உயர்ந்தவனே!
பாசத்தில் சிறந்தவனே!
பழகுவதில் இனியவனே!
பார் போற்ற வாழ்ந்தவனே!
அன்பாலும் பண்பாலும்
உள்ளம் கவர்ந்தவனே!
உதவி செய்வதில்
உய உயர்ந்தவனே!
இதுவென்ன வாழ்வென்று
நாம் ஒரு போதும் இருந்ததில்லை
இனிதான வாழ்வினைத் தந்து
நமக்காய் இருந்தவனே!
ச
டுதியாய் உன் வாழ்வு முடியுமென
கனவிலும் நாம் நினைத்ததில்லை!
இன்னும் எத்தனை காலம் எமக்காயிருந்து
ஏற்றம் தருவீர் என்றிருக்க
மரணம் என்ற செய்தியால்
நாமும் மரணித்தோம்.
தேடி வந்து தேடி வந்து
செய்த உதவியெல்லாம்
நெஞ்சமெல்லாம் நிறைந்துள்ளது
இனிய உறவுக்கு நீரோர் ஆதாரம்.
உம்மைத் தெரிந்தவர்கள் யார்
உமது பிரிவை ஏற்பார்கள்.
நீரிருக்கும் இடத்தில் சிறப்புக்கு பஞ்சமேது?
இனிமேல் உனது புன் சிரிப்பை
எங்கே நாம் காண்போம்.
உமது மறைவால் துயருற்றுள்ள
உள்ளங்கள் அனைத்துக்கும்
மற்றும்
எமது குடும்பத்திற்கு ஆறுதல் கூறியும்
சகல வழிகளிலும் முன்னின்று உதவியும்
ஒத்துழைப்பும் வழங்கிய நல்லுள்ளங்கள்
அனைத்துக்கும் நமது கோடானு கோடி நன்றிகள்!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!