மறைந்த அழகையா கெந்தீஸ்வரன் அவர்களுக்கு அஞ்சலி! "ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ மாநிலத்தீர் - வேண்டா! நமக்கும் அதுவழியே! நாம்போம் அளவும் எமக்கென்? என்(று) இட்டு, உண்டு, இரும்!" என ஔவை கூறிய நல்வழியில் நினைவுகூர்வோம்!! உடம்பார் அழியின் உயிரார் அழிவர் எனும் இயங்கியல் வாழ்வில் 'நேற்றிருந்தார் இன்றில்லை!' என காலம் கடந்து செல்கிறது. இவரது பிரிவால் வாடும் அனைவருக்கும் எமது ஆறுதல்கள்! ஈழத் தமிழராய் பிறந்து புவியெங்கும் விசிறியெறிப்பட்டவராய் விரவித் தொடர்கிறது எமது புலம்பெயர்வு வாழ்வு. எம்மோடு 'உலகத் தமிழர்' என அடையாளமிடும் எமது அடுத்த சந்ததியினரது வாழ்வின் தொடர்ச்சி மிக அரிய அனுபவங்களைக் கொண்டவை. இவை உள்ளது உள்ளபடியானதாய் அறிக்கைகளாகப் பதிவுற வேண்டும். இவை குடும்ப ஆவணங்களாகவோ சமூக ஆவணங்களாகவோ அமையலாம். இத்தகைய ஆவணத் தொகுதிகள் எதிர்காலத்திடம் சென்றடைய வழி செய்ய வேண்டும். ஒரு காலத்தில் செவி வழியாகப் பகிர்ந்த எமது முன்னோர்களது காதைகள் பற்றி நாமறிவோம். தற்காலத்திய நவீன மக்கள் மயமாகிய தொடர்புபூடக வாழ்வில் இவை பொருத்தப்பாடுடைய ஆவணங்களாகப் பதிவுற்று பகிரப்படட்டும். இவரது அண்ணன் தங்கேஸ்வரன் எனும் எமது நண்பன் வழியாக எமது ஆழ்ந்த இரங்கல்களைப் பகிர்கிறோம்!
I know too well of the devastation, hurt and tragedy that this will inevitably cause.