2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கெஜஞானவதி இராஜசிங்கம்
(பேபி)
யா/யூனியன் கல்லூரி பழைய மாணவி, இளைப்பாறிய பிரதம மருந்தாளர் - Castle Street மகப்பேற்று வைத்தியசாலை, பொரளை
வயது 71
Tribute
13
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வறுத்தலைவிளான் தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கெஜஞானவதி இராஜசிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
வாழ்வின் தத்துவத்தை எமக்குணர்த்தி
தரணியில் வாழ்வாங்கு வாழ
வழியமைத்து தந்த அம்மாவே!
உன் உயிரில் பாதி தந்தாய் அம்மா
நான் விடும் மூச்சிலே உன் கருவறை வெப்பம் உணர்கின்றேன்
என் சிரிப்பினிலே நீ பட்ட துன்பம் காண்கின்றேன்
உலகானவளே உன்னையும் ஒரு தரம் சுமக்கக் கேட்கின்றேன்
இறைவன் வரம் தருவாரோ?
அம்மா ஏழு ஜென்மங்களில் நம்பிக்கை இல்லை
இனி ஒரு ஜென்மம் இருந்து உயிரினமாய் பிறந்தால்
உன்னை எந்தன் மகளாக்கும் பாக்கியம் மட்டும் போதும்
எம்மை ஆறாத்துயரில் ஆழ்த்தி விட்டு
மீளாத் துயில் கொண்ட அன்புத் தெய்வத்திற்கு
எமது கண்ணீர் அஞ்சலிகள்..
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்