Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 14 SEP 1949
இறப்பு 06 MAY 2021
அமரர் கெஜஞானவதி இராஜசிங்கம் (பேபி)
யா/யூனியன் கல்லூரி பழைய மாணவி, இளைப்பாறிய பிரதம மருந்தாளர் - Castle Street மகப்பேற்று வைத்தியசாலை, பொரளை
வயது 71
அமரர் கெஜஞானவதி இராஜசிங்கம் 1949 - 2021 வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வறுத்தலைவிளான் தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கெஜஞானவதி இராஜசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

பத்துமாதம் மடிசுமந்து
பக்குவமாய் பெற்றெடுத்து
 பாலோடு பாசத்தையும் ஊட்டி
கண்களைப் போல் எமைக்காத்து
கண்ணியமாய் வாழவைத்த அன்புத்தாயே!

கண்ணில் அழுகை ஓயவில்லை
 நெஞ்சம் உன்னை மறக்கவில்லை
நேசம் என்றும் நிலைத்திருக்க
 பாசத்தை தந்து பறித்தெடுத்தவனே!

எம்மை எல்லாம் அன்பாலும் பண்பாலும்
அரவணைத்து எம்மை வழிநடத்திய
அந்த நாட்கள் எம் நினைவலைகளில்
 என்றும் சுழல்கிறதே அம்மம்மா!!

எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
துளிகூட அழியாது உம்நினைவு..
அளவற்ற உம் அன்பிற்காய்
அலைகிறது எங்கள் மனம்..
மறுபடியும் உங்கள் வருகைக்காய்
காத்திருப்போம் இவ்வுலகில்...

உங்கள் பிரிவால் துயருறும்
மகன்கள், மருமகள், பேரப்பிள்ளைகள்,




தகவல்: குடும்பத்தினர்