
யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கதிர்காமர் கோபாலபிள்ளை அவர்கள் 22-12-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமர் தங்கம்மா தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பூமலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவசோதி, சிறிகரன், மகேஸ்வரன், சுகந்தினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தர்மினி, சுபோதினி, சுஜந்தினி, பிரேமகுமார்(நீர்ப்பாசன பணிப்பாளர்– வடமாகாணம்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கௌரியம்மா, இரத்தினபூபதி, பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பரமானந்தம், பத்மாவதி, சண்முகேஸ்வரி, கணேசானந்தன் ஆகியோரின் மைத்துனரும்,
லக்சினி, நிருசினி, கஜானன், ககேசன், மிதேஷா, சஸ்வதன், மிஹிரன், புராதனி, மர்த்தனி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-12-2020 செவ்வாய்க்கிழமை அன்று இணுவிலில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
ஆத்மா இறைநிழலிருந்து ஆசிநல்கட்டும்