4ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கதிர்காமு சிவரூபநாதன்
(யோகன், ரூபன்)
வயது 56

அமரர் கதிர்காமு சிவரூபநாதன்
1964 -
2021
எழுதுமட்டுவாள், Sri Lanka
Sri Lanka
Tribute
8
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி: 05-03-2025
யாழ். எழுதுமட்டுவாள் விழுபளையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கதிர்காமு சிவரூபநாதன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் உருவமாய் பண்பின்
சிகரமாய் பாசத்தின் பிறப்பிடமாய்
பக்தியின் இருப்பிடமாய் வாழ்ந்த
எங்கள் அன்புத் தந்தையே!
ஆண்டு நான்கு என்ன ஆயிரம்
ஆண்டுகளானாலும் நாம் வாழும்
வரை உம் நினைவலைகள்
எம்மிலே வாழும்....
அன்பு தொடங்கி அர்பணிப்பு வரை 'அப்பா'
என்பதில் அடங்கி விட்டது.....!!!
நீங்கள் பிரிந்து நான்கு வருடம்
ஓடிப் போனது இன்னமும் நம்பவே
முடியாமல் நாங்கள் இங்கே தவிக்கின்றோம்.
ஆண்டுகள் பல சென்றாலும்
நீங்காது உங்கள் நினைவு எம் நெஞ்சோடு!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்