யாழ். பருத்தித்துறை பத்திரகாளி கோயில் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Southhall ஐ வதிவிடமாகவும் கொண்ட கதிர்ச்செல்வன் நாகலிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
பிள்ளைகள்
ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
அப்பா உங்கள் அன்பை யாரிடம் காண்போம்
பெற்ற கடன் தீர்க்க நாங்கள்
உங்களுக்கு காலம் தந்தோம்
ஆனால் நாங்கள் உங்களிடம் பட்ட கடனை
தீர்க்க நீங்கள் எங்களுக்கு
காலம் தரவில்லையே அப்பா
மனைவி
என் அன்பிற்குரியவரே, என் ஆருயிரே
என் அன்பின் பொக்கிசமே
அழகாய் வாழ்ந்த எம் குருவிக்கூட்டில்
அகாலமாய் ஒரு குருவி பறந்ததேனோ?
ஆயிரம் உறவுகள் அருகில் இருந்தாலும்
ஆருயிரே உங்களுக்கிணை யாருமில்லை
இவ்வுலகில்
அன்னாரின் அந்தியேட்டி கிரியை 24-10-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 08:00 மணி முதல் 10:00 மணி வரை நடைபெற்று அதை தொடர்ந்து மதிய போசனம் நிகழ்வும் அவரது இல்லத்தில் நடைபெறும் அனைவரும் வந்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
வீட்டு விலாசம்:
24, Marlborough Road, UB2 5LW, UK
ஆத்மா சாந்யடைய இரைவனைப்பிரார்த்திக்கின்றோம். 31 வருட நட்பு…